அணை பாதுகாப்புக்கான தேசிய குழு ஆண்டுக்கு இரண்டு முறை கூடுகிறது. இந்தக் குழு கொள்கைகளை உருவாக்கி, அணை பாதுகாப்பு தரநிலைகள் தொடர்பான விதிமுறைகளை பரிந்துரைக்கும்.
மாநில அரசின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) நீர்வளத்துறை அல்லது அதற்கு சமமான அளவிலான அலுவலர் அணைப் பாதுகாப்பு குறித்த தேசிய குழுவில் உறுப்பினராக கலந்து கொள்வதற்காக சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
மாநில அளவிலான அணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அணைகளின் உரிமையாளர்களுடன் பாதுகாப்பு தொடர்பான தரவு மற்றும் நடைமுறைகளை தரப்படுத்துவதற்காக 6 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தை மத்திய அரசு நிறுவியுள்ளது.
தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் இந்தக் கொள்கைகளை அமல்படுத்துவதோடு, மாநிலங்களின் அணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையேயான பிரச்சினைகள் மற்றும் மாநிலங்களின் மாநில அணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே அல்லது ஒரு மாநில அணை பாதுகாப்பு அமைப்பு மற்றும் அந்த மாநிலத்தில் உள்ள எந்தவொரு அணை உரிமையாளருக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆணையமாக செயல்படும்..
தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய 4 அணைகளுக்கான மாநில அணை பாதுகாப்பு அமைப்பாகவும் செயல்படுகிறது.
அணைப் பாதுகாப்புக்கான மாநிலக் குழு அமைப்பதற்கான அறிவிக்கையை 30.06.2022 நாளிட்ட அரசாணை (நிலை) எண்.56 நீர்வளத்துறை மூலம் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இக்குழுவின் கூட்டம் ஆண்டுக்கு இரண்டு முறையும், அதில் ஒரு கூட்டம் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பும் நடத்தப்பட வேண்டும். மேலும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குழு மறுசீரமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுவில் 16 உறுப்பினர்கள் மற்றும் 8 சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளனர்.
அணை பாதுகாப்பு குறித்த மாநிலக் குழுவின் முதல் கூட்டம் 26.05.2023 அன்றும் இரண்டாவது கூட்டம் 09.01.2024 அன்றும் சென்னையில் நடைபெற்றது.
அணை பாதுகாப்புச் சட்டம் 2021–ன் படி, மாநிலத்தில் வகைப்படுத்தப்பட்ட அணைகளின் எண்ணிக்கை 30-க்கு மேல் இருந்தால், மாநில அணை பாதுகாப்பு அமைப்பானது, தலைமைப் பொறியாளர் பதவிக்கு குறையாத ஒரு அதிகாரியின் தலைமையின் கீழ் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 128 (90 நீர்வளத் துறை + 38 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்) அணைகள் உள்ள காரணத்தால் தமிழ்நாடு அரசு, அரசாணை (நிலை) எண்.56 நீர்வளத்துறை (நீவ2) தேதி 30.06.2022 மூலம், 2021 ஆம் ஆண்டின் அணை பாதுகாப்புச் சட்டத்தின்படி, மாநில அணை பாதுகாப்பு அமைப்பு அமைப்பதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடுகளை மேற்கொள்ள, நீர்வளத்துறை, இயக்கம் மற்றும் பராமரிப்புத் துறையின் தலைமைப் பொறியாளர் பதவி, இயக்கம் மற்றும் பராமரிப்பு மற்றும் மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் தலைமைப் பொறியாளர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அணை பாதுகாப்புச் சட்டம், 2021 மற்றும் தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்/பரிந்துரைகளின்படி, மாநில அணை பாதுகாப்பு அமைப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அணை பாதுகாப்புச் சட்டம், 2021 செயலாக்கத்தின் பல்வேறு கட்டங்களில் உள்ள முக்கிய பணிகள் கீழ்கண்டவாறு: -
- பருவ மழைக்கு முந்தையக் காலம் (ஏப்ரல் 10 முதல் ஜூன் 14 வரை), பருவமழை I (ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 15 வரை), பருவமழை II (ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் 14 வரை) மற்றும் பருவமழைக்குப் பிந்தைய காலம் (நவம்பர் 15 முதல் ஏப்ரல் 9 வரை) ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் காலமுறை சீர்தன்மை அறிக்கை / அறிக்கைகளை சமர்ப்பித்தல்.
- காலமுறை சீர்தன்மை நிலை அறிக்கைகளின் அடிப்படையில், வருடாந்திர அறிக்கையைத் தயாரித்து ஒப்புதலுக்காக சமர்ப்பித்தல்.
Reports.
- Phase I safety inspection is being carried out for 128 dams (90 WRD + 38 TANGEDCO) once in five
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 128 அணைகளுக்கும் முதல் கட்ட பாதுகாப்பு ஆய்வினை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்காணிப்பு பொறியாளர், மாநில அணை பாதுகாப்பு அமைப்பு தலைமையில் கீழ்க்கண்ட மாநில அளவிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட பன்முகக் குழுவால் மேற்கொள்ளப்படுகிறது.
Superintending Engineer, State Dam Safety Organisation.
-
• கண்காணிப்புப் பொறியாளர், மாநில அணை பாதுகாப்பு அமைப்பு - தலைவர்
-
• கண்காணிப்புப் பொறியாளர் வடிவமைப்பு வட்டம் - உறுப்பினர்
-
• செயற்பொறியாளர் (மண்தன்மை மற்றும் ஆராய்ச்சி கோட்டம்) - உறுப்பினர்
-
• பொது கண்காணிப்பாளர் பொதுப் பணி, பணிமனை மற்றும் பண்டக சாலை கோட்டம் - உறுப்பினர்
-
• இந்திய புவியியல் அளவைத் துறையின் பிரதிநிதி - உறுப்பினர்
இதுவரை 71 அணைகளில் (59 நீர்வளத்துறை +
12 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்)
ஆய்வுகள் முடிக்கப்பட்டு, அணைகளில் உள்ள குறைபாடுகளை சீர்செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தொடர்புடைய கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு ஆய்வு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
-
128 அணைகளுக்கும் அணை பாதுகாப்பு அலகுகள் அமைக்கப்பட்டன.
-
ஒவ்வொரு அணையின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு கையேடு தயாரித்தல்.
-
அணை பாதுகாப்பு அலகுகள் பதிவு புத்தகம் அல்லது தரவுத்தளத்தை பராமரிப்பதை உறுதி செய்தல்.
-
தொழில்நுட்ப ஆவணங்களைப் பேணுதல்.
-
“தர்மா” வலைதளத்தில் அணை பாதுகாப்பு அலகுகளில் அணை தரவு மேலாளர் (அணைகளை ஆய்வு செய்யும் பொறியாளர்கள்) அணையின் தரவுகளை “தர்மா” வலைதளத்தில் உள்ளீடு செய்ய உதவுதல் மற்றும் கண்காணித்தல் மற்றும் “தர்மா” வலைதளத்தில் பருவமழை ஆய்வு அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தல்.
-
தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பிற பணிகளை மேற்கொள்ளுதல்.