Text added to get Marudham font files don't remove it

A+ A A-

காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு அரசுக்கு அனைத்து பன்மாநில நீர் பங்கீடு பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களை கையாளுவதில் உதவுகிறது. இந்தக் குழுமம் 1990-இல் அமைக்கப்பட்டது. இக்குழுமம், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் நடுவர்மன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்ய அனைத்துத் தொழில்நுட்ப அறிக்கைகள் / புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல்களைத் தயாரித்து அரசுக்கு அளித்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள பல்வேறு பன்மாநில நதிநீர்ப்பங்கீடு தொடர்பான நதிநீர் மேலாண்மை ஆணையம் / ஒழுங்குமுறைக் குழு நடத்தும் அனைத்து கூட்டங்களிலும் இக்குழுமம் பங்கேற்கிறது.

கூடுதலாக, இக்குழுமம் பன்மாநில நதிநீர் இணைப்புத் திட்டங்களைப் பற்றியும் மற்றும் நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் பல்வேறு முகமைகளான தேசிய நீர் மேம்பாட்டு முகமை, மத்திய நீர்வள ஆணையம் மற்றும் ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் நடத்தும் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்கிறது. இது தவிர, இக்குழுமம் தமிழ்நாட்டின் நீர்வளத்தை மேம்படுத்த பல்வேறு அறிக்கைகளையும் தயாரித்து வருகிறது.

Key issues managed by the Wing include:

இக்குழுமத்தால் காவிரி நதிநீர்ப் பங்கீடு,
முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுதல்,
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் மாநிலத்திற்கு உரிய நீரை பெறுதல்,
நெய்யாறு பாசனத் திட்டம், பெண்ணையாறு மற்றும்
பாலாறு நதிநீர் பிரச்சனைகளில் மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டுதல் போன்ற முக்கியமான பிரச்சனைகள் கையாளப்பட்டு வருகின்றன.
மேலும், கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம், பம்பா - அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்புத் திட்டம் மற்றும் பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் தொடர்பான பணிகளும் இக்குழுமத்தால் கையாளப்பட்டு வருகின்றன.