Text added to get Marudham font files don't remove it

A+ A A-
Aliyar dam

முன்னுரை

05.10.1995 ஆம் ஆண்டில் தலைமைப் பொறியாளர், நீ.ஆ.து., பொள்ளாச்சி மண்டலம், பொள்ளாச்சியில் தலைமை இடமாகக் கொண்டு அமைக்கப்பட்டு பின்பு கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டு 18.05.2000 அன்று முதல் தலைமைப் பொறியாளர் அலுவலகம் கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இம்மண்டலத்தின் நீரியல் எல்லையானது பரம்பிக்குளம் ஆழியார் வடிநிலம், பவானி உபவடிநிலம், நொய்யல் உபவடிநிலம் மற்றும் அமராவதி உபவடிநிலமாகும். இவை அனைத்தும் 6 மாவட்டங்களில் பரவியுள்ளன. அதாவது நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் ஒரு பகுதியும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு பகுதியிலும் பரவியுள்ளன.

நிறுவன அமைப்பு

இம்மண்டலத்தின் கீழ் 4 வட்டங்கள், 10 கோட்டங்கள், 40 உபகோட்டங்கள் மற்றும் 141 பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தும் நீர்ப் பாசனத் திட்டங்களை இயக்குதல், பராமரித்தல், பாசன ஒழுங்கு முறையைக் கண்காணித்தல் மற்றும் நீர்வள ஆதாரத்தின் திட்டமிடுதல், மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பில் செயல்பட்டு வருகின்றன.

நீர்வள அமைப்பு

இப்பாசன அமைப்பில் அமைந்துள்ள 24 அணைகள், 81 முறை சார்ந்த குளங்கள் மற்றும் 102 முறை சாரா குளங்கள் கீழ்க்கண்ட வேளாண்மை பாசனப் பரப்பின் பாசனத் தேவையை மேற்படி வடிநிலங்களில் பூர்த்தி செய்கின்றன.

உபவடிநிலம்பகுதி
பரம்பிக்குளம் ஆழியாறு வடிநிலம்1,77,456 ஹெக்டேர்
பவானி வடிநிலம்106740 ஹெக்டேர்
நொய்யல் வடிநிலம்15459 ஹெக்டேர்
அமராவதி வடிநிலம்51324 ஹெக்டேர்
மொத்தம்350979 ஹெக்டேர்

மேற்படி 3,50,979 ஹெக்டேர்மொத்த ஆயக்கட்டில், முறை சார்ந்த பாசனப் பரப்பு 3,42,983 ஹெக்டேர் மற்றும் மீதமுள்ள 8,046 ஹெக்டேர் முறை சாராப் பாசனப் பரப்பாகும்.

பிரதான திட்டங்கள்