21.09.1995 ஆம் ஆண்டில் தலைமைப்பொறியாளர்நீஆதுமதுரை மண்டலம்மதுரையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது இம்மண்டலத்தின் நீரியல் எல்லையாக வைகை வடிநிலம்பாம்பாறு (பகுதி) & கோட்டக்கரையார் வடிநிலம்குண்டாறு வடிநிலம், வைப்பாறு வடிநிலம், கல்லாறு வடிநிலம், தாமிரபரணி வடிநிலம், நம்பியாறு வடிநிலம் மற்றும் கோதையாறு வடிநிலம் உள்ளதுஇவை அனைத்தும் 10 மாவட்டங்களில் பரவியுள்ளனஅதாவது தேனி, மதுரை, திண்டுக்கல் (பகுதி), சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவியுள்ளன.
இம்மண்டலத்தின் கீழ் 5 வட்டங்கள் 22 கோட்டங்கள், 90 உபகோட்டங்கள் மற்றும் 332 பிரிவுகள்உள்ளனஇவை அனைத்தும் நீர்ப் பாசனத் திட்டங்களை இயக்குதல்பராமரித்தல்பாசன ஒழுங்கு முறையைக் கண்காணித்தல் மற்றும் நீர்வள ஆதாரத்தின் திட்டமிடுதல்மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பில் செயல்பட்டு வருகின்றன
இப்பாசன அமைப்பில் அமைந்துள்ள 32 அணைகள் மற்றும் 5098 முறை சார்ந்த குளங்கள் மற்றும் 2503 முறை சாரா குளங்கள் மொத்தம் 7601 குளங்கள்கீழ்க்கண்ட வேளாண்மை பாசனப் பரப்பின் பாசனத் தேவையை மேற்படி வடிநிலங்களில் பூர்த்தி செய்கின்றன
உபவடிநிலம் | பகுதி |
---|---|
வைகை வடிநிலம் | 101840 ஹெக்டேர் |
பாம்பாறு (பகுதி) கோட்டக்கரையார் வடிநிலம் | 22064 ஹெக்டேர் |
குண்டாறு வடிநிலம் | 34990 ஹெக்டேர் |
வைப்பாறு வடிநிலம் | 31854 ஹெக்டேர் |
கல்லாறு வடிநிலம் | 2823 ஹெக்டேர் |
தாமிரபரணி வடிநிலம் | 74779 ஹெக்டேர் |
நம்பியாறு வடிநிலம் | 7654 ஹெக்டேர் |
கோதையாறு வடிநிலம் | 48816 ஹெக்டேர் |
மொத்தம் | 324820 ஹெக்டேர் |
மேற்படி 32 அணைகள் மற்றும் 7601குளங்களுக்கான 3,25,216 ஹெக்டேர் மொத்த ஆலக்கட்டில் முறைசார்ந்த பாசனப்பரப்பு 1492361.29 ஹெக்டேர் மற்றும் மீதமுள்ள ஹெக்டேர் முறைசாராப் பாசனப்பரப்பாகும்