திட்ட உருவாக்கப் பிரிவானது மாநிலத்தின் நீர் ஆதாரங்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரிய, நடுத்தர மற்றும் சிறிய பாசனத் திட்டங்கள் மற்றும் ஆறுகளை இணைக்கும் திட்டங்களை மேற்கொள்ள, ஆய்வுகள் மேற்கொண்டு முதல்நிலை–சாத்தியக்கூறு அறிக்கைகள் தயாரித்தல். தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ரீதியாக சாத்தியக்கூறு உள்ள திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிர்வாக ஒப்புதல் பெற அரசுக்கு சமர்ப்பித்தல் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. இப்பிரிவு மண்டலத் தலைமைப் பொறியாளர்கள் தயார் செய்யப்பட்ட சில முக்கிய திட்டங்களுக்கான விரிவான மதிப்பீடுகளை அரசுக்கு பரிந்துரைக்கிறது.
மேலும், இப்பிரிவானது நபார்டு, தேசிய வேளாண்மை மேம்பாட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா திட்டங்களின் மூலம் நிதி உதவி பெற ஒருங்கிணைப்பு முகமையாகவும் செயல்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் மற்றும் மாநில நிதி திட்டங்கள் சார்ந்த, சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கைகள் இப்பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள திட்ட உருவாக்க வட்டம், சேலம் கீழுள்ள மூன்று சுற்றுச்சூழல் குழும கோட்டங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.