Text added to get Marudham font files don't remove it

A+ A A-

உலக வங்கியின் நிபந்தனையின் படி தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் முற்படு தேவைக்காக மாநிலநீர்வள ஆதார மேலாண்மை முகமை நீர்வளத்துறையின் கீழ் தமிழ்நாட்டின் நிலையான நீர்வளமேலாண்மைக்காக நிறுவன அமைப்புகள் மற்றும் அறிவுத்திறன் மேம்பாடு மற்றும் தமிழ்நாட்டின் ஆற்றின் வடிநிலகட்டமைப்பின் மூலம் ஒருங்கிணைந்த நீர்வளங்களின் மேம்பாடு மற்றும் மேலாண்மை ஆகியவற்றின் நோக்கத்துடன் 2017 இல் உருவாக்கப்பட்டது.

மாநில நீர்வள ஆதாரமேலாண்மை முகமைக்கு ஒதுக்கப்பட்ட பணிகள்

  •  நீர்வளத்துறையில் நன்கு திட்டமிடவும், திறன்பட நீரை பகிர்ந்து மேலாண்மை செய்திட உதவும் வகையிலும் வலைதள வடிவமைப்பு மூலம் ஒருங்கிணைந்த தமிழ்நாடு நீர்வளத் தகவல் அமைப்பினை மாநில நீர்வள ஆதார மேலாண்மை முகமை உருவாக்கப்பட்டது
  •  ஆற்றுப் படுகைகளுக்கான முடிவு செயலாக்க ஆதரவை உருவாக்குதல் மற்றும் ஆற்றுப் படுகைகளுக்கான மேற்பரப்பு நீர் சாத்தியத்தை மதிப்பீடு செய்தல்.
  •  நீர்த்தேக்கத்திற்கான வெள்ள நீர்செயல்பாட்டு அமைப்பு உருவாக்குதல்.
  •   நிறுவன வலுப்படுத்துதல் & நீர்வளத்துறை பொறியாளர்களின் திறன் மேம்பட பயிற்சிகள், பட்டறைகள், கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துதல்.
  •  தமிழ்நாடு நீர்வள தகவல் அமைப்பை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல்
  •  பாசன அமைப்புகளின் நீர்தணிக்கை ஆய்வு அறிக்கை தயாரித்தல்

2023-2024ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள்

  •  நீர்த்தேக்கம் மற்றும் நீர்ப்பாசன அமைப்பின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக வீடூர் நீர்த்தேக்கம் மற்றும் கோமுகி நீர்த்தேக்கம் திட்டத்திற்கான நீர்தணிக்கை ஆய்வு நடத்தப்பட்டது மற்றும் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது
  •  "நிலையான நீர்வள மேலாண்மைக்கான விவசாயத் துறையில் நீர் பாதுகாப்பு உத்திகள்" என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
  •  ஒருங்கிணைந்த நீர்வளமேலாண்மைக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட “தமிழ்நாடு நீர்வள தகவல் அமைப்பில்” தரவு சேகரிப்பு மற்றும் மேம்படுத்தல்.
  •  2022ஆம் ஆண்டு வரை முழுகாலநிலை தரவு மற்றும் சூரியஒளிதரவு விவரங்கள் சேகரித்தல் மற்றும் மேம்படுத்தல்.
  •  2022ஆம் ஆண்டு வரை மழைப்பொழிவு நிலையத்திற்கான சராசரி ஆண்டு மழையின் விவரங்கள் சேகரித்தல் மற்றும் கணக்கீடு செய்தல்.
  •  2022 ஆம் ஆண்டு வரையிலான தொழில்துறை நீர்நுகர்வு விவரங்களின் சேகரிப்பு.
  •  மிருகண்டாநதி மற்றும் கோமுகிநதிநீர்த்தேக்கத்திற்கான நீர்தணிக்கை நடத்துவதற்கான தரவுசேகரிப்பு
  •  வீடூர் மற்றும் கோமுகி நீர்த்தேக்கத்தின் செயல்திறனை தணிக்கை செய்வதற்கான விவசாய மற்றும் புள்ளியியல் தரவுகளின் சேகரிப்பு மற்றும் ஆய்வு செய்தல்.

2024-2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்

  •  நீர்த்தேக்கத்திற்கான பாசனப்பரப்பு பகுதியை புவி தகவல் குறியீடு மற்றும் தொலை உணர்வி பயன்படுத்தி வரைபடம் உருவாக்குதல்
  •  சென்னை, மதுரை மற்றும் திருச்சி மண்டலத்தில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கான நீர்தணிக்கை ஆய்வுபணிகள் மேற்கொள்ளுதல்.
  •  விவசாயிகளுக்கு விவசாய மேம்பாடு உத்திகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பயிற்சிகள் மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்களுக்கான திறனைமேம்படுத்துதல் குறித்துபயிற்சிகள், பட்டறைகள், கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துதல்.