05.10.1995 ஆம் ஆண்டில் தலைமைப்பொறியாளர், நீ.ஆ.து., திருச்சி மண்டலம், திருச்சியில் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இம்மண்டலத்தின் நீரியல் எல்லையானது காவிரி வடிநிலம், வெள்ளார் வடிநிலம், அக்னியார் வடிநிலம் மற்றும் பாம்பார் – கோட்டகரையார்பகுதி) வடிநிலம் உள்ளது. இவை அனைத்தும் 12 மாவட்டங்களில் பரவியுள்ளன. அதாவது சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவியுள்ளன.
இம்மண்டலத்தின் கீழ் 4 வட்டங்கள், 22 கோட்டங்கள், 68 உபகோட்டங்கள் மற்றும் 315 பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தும் நீர்ப் பாசனத் திட்டங்களை இயக்குதல், பராமரித்தல், பாசன ஒழுங்கு முறையைக் கண்காணித்தல் மற்றும் நீர்வள ஆதாரத்தின் திட்டமிடுதல், மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பில் செயல்பட்டு வருகின்றன.
இப்பாசன அமைப்பில் அமைந்துள்ள 6 அணைகள் மற்றும் 925 முறை சார்ந்த குளங்கள் மற்றும் 1432 முறை சாரா குளங்கள் (மொத்தம் 2357 குளங்கள்) கீழ்க்கண்ட வேளாண்மை பாசனப் பரப்பின் பாசனத் தேவையை மேற்படி வடிநிலங்களில் பூர்த்தி செய்கின்றன
உபவடிநிலம் | பகுதி |
---|---|
காவிரி வடிநிலம் | 3636900 ஹெக்டேர் |
வெள்ளார் வடிநிலம் | 674200 ஹெக்டேர் |
அக்னியார் வடிநிலம் | 470200 ஹெக்டேர் |
பாம்பார் - கோட்டகரையார் வடிநிலம் பகுதி) | 372000 ஹெக்டேர் |
மொத்தம் | 5153300 ஹெக்டேர் |
மேற்படி 6 அணைகளுக்கு 701163 ஹெக்டேர் பாசனப் பரப்பாகும். குளங்களுக்கு 151521 ஹெக்டேர் மொத்த ஆயக்கட்டில், முறை சார்ந்த பாசனப் பரப்பு 59851 ஹெக்டேர் மற்றும் மீதமுள்ள 91670 ஹெக்டேர் முறை சாராப் பாசனப் பரப்பாகும்.